என் அடுத்த படம் குறித்து எதுவும் விவாதிக்க வேண்டாம்;சிம்பு

384

சிம்பு அடுத்து என்ன செய்யப் போகிறார்… நடிப்பாரா… இயக்குவாரா… இயக்கத்தோடு நிறுத்திக் கொள்வாரா என்றெல்லாம் மீடியாவில் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் சிம்பு.

அடுத்த படத்தை இயக்கி நடிப்பார் என்பதற்கான அறிகுறி அதில் தெரிகிறது. அதில் ‘தயவு செய்து யாரும் என் அடுத்த படம் குறித்து எதுவும் விவாதிக்க வேண்டாம். இந்த முறை என் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன். நானே விரைவில் அறிவிப்பேன்’ என்று கூறியுள்ளார். படுதோல்வியைச் சந்தித்து சிம்புவின் கேரியரையே கேள்விக் குறியாக்கிய அஅஅ படத்துக்குப் பிறகு, சிம்பு தான் முன்பு கைவிட்ட கெட்டவன் படத்தை இயக்கி நடிக்கப் போகிறார் என்று மீடியாவில் செய்திகள் வெளிவந்ததன் விளைவுதான் சிம்புவின் இந்த அறிவிப்பு.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE