கார்த்திகைக்குமரா போற்றி இறுவட்டு வெளியீடு[படங்கள் இணைப்பு]

108

கார்த்திகைக்குமரா போற்றி இறுவட்டு வெளியீடு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வெளியிட்டு வைத்தார்.

 

ஈழத்துக்கவிஞர் சி.றஜீத்தின் தயாரிப்பில் உருவான நல்லூர் கார்த்திகைக்குமரா போற்றி எனும் பக்தி இறுவட்டு வெளியீட்டு விழா இன்று 10.08.2017 வியாழக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள நாவலர் மணிமண்டபத்தில் மாலை 04 மணியளவில் றஜீத் தலைமையில் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு இறுவட்டினை வெளியிட்டு வைத்ததுடன் கவிஞர்கள், இசையமைப்பாளர்களை பொன்னார் போர்த்தியும் கௌரவித்தார்.

 

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன், தயரிப்பாளர் சி.றஜீத், கிருபா லேர்னர்ஸ் உரிமையாளர் கிருபாகரன், இளவாலை மெய்கண்டான் பாடசாலை அதிபர் மற்றும் கலைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE