ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

319

 

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று அதிகாலை 150க்கும் குறைவான படகுகளே கடலுக்கு சென்றன. இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் சிலர் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையேயான கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 4 பெரிய கன்போட் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் கார்த்திக் என்பவரின் படகின் பின்பகுதி உடைந்து சேதமடைந்தது. கடல் நீர் உட்புகாமல் தடுத்து அந்தப் படகில் இருந்த மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

மேலும் நாகதாஸ், பாண்டி, ராமு ஆகியோருக்கு சொந்தமான 3 படகுகளையும், அதில் இருந்த மீனவர்கள் ராஜா, களஞ்சியராஜ், சோலை கனகராஜ், பாண்டி, ஆரோக்கிய அந்தோணி, தாசன், செல்லையா, ராமு, கார்மேகம், முனியாண்டி மற்றும் பலவேசம் ஆகிய 12 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். மீனவர்கள் அனைவரையும் இன்று காலை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை சிறைகளில் ஏற்கனவே 67 மீனவர்கள் உள்ளனர். இன்று சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும் சேர்த்து, இந்த எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. இன்று பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் சேர்த்து இலங்கை வசம் 177 படகுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE