121வது நாளை எட்டியது நெடுவாசல் போராட்டம்

316

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராம மக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தினமும் நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று கலந்துகொண்ட பெண்கள், விவசாயிகள், மத்திய, மாநில அரசுகள் மக்கள், விவசாயிகள் தலையில் கல்லை போட்டது போல் சித்தரித்து தலையில் கல்லை வைத்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 121வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மக்கள் கூறுகையில், மாநில அமைச்சர்களோ, அதிமுக எம்எல்ஏக்களோ இங்கு வந்து பார்க்கவில்லை. எங்கள் குரல் இன்னும் அவர்களுக்கு கேட்காதது வேதனை அளிக்கிறது. ஓயமாட்டோம். தொடர்ந்து போராடுவோம்’ என்றனர். பொதுமக்கள் 121 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்ற போதிலும் மத்திய அரசும் மாநில அரசும் இந்த போராட்டத்தை ஒரு பொருட்டாக கருதவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் தமிழக அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் கண்டுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE