கிரிக்கெட் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அமைச்சர் அர்ஜுண

336

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் கவனத்திற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு முன்னாள் இலங்கை அணியின் தலைவரும் அமைச்சருமான அர்ஜுண ரணதுங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதமானது எதிர்வரும் வாரங்களில் நாட்டில் பொறுப்பான சிலரிடமும் கையளிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அணி தொடர்ச்சியாக சந்தித்து வரும் தோல்விகள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பிலும் இனிவரும் காலங்களில் இலங்கை அணியை வெற்றிப்பெறச் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதுகுறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்றிட்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால ‘அமைச்சர் அர்ஜுண அரசாங்கத்தை திட்டிக்கொண்டு அரசாங்கத்திற்குள் இருக்காமல் அமைச்சுப் பதவியில் இருந்து பதவியிலிருந்து விலகவேண்டும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE