படகு விபத்து – 2 பெண்கள் உட்பட 8 பேர் பலி!

760
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பார்பன் ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படகில் பயணம் செய்த 17 பேர் காணாமல் போகினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் 8 போலீஸ் குழுக்கள் ஈடுபட்டன.
இதில் விபத்து நடந்த அன்று ஒருவரின் உடல் பாரான் மாவட்டம் ககோனி கிராமத்தின் ஆற்றங்கரையில் இருந்து மீட்கப்பட்டது.
4 படகோட்டிகள் உட்பட 9 பேரை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர்.
எஞ்சிய 7 பேர் நீரில் முழ்கியிருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில் அவர்களின் உடலை ஆற்றின் பல்வேறு பகுதியிலிருந்து மீட்புப் படையினர் மீட்டனர்.
இதனால் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE