புலனாய்வு வியூகத்துக்குள் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு[கட்டுரை ]

610

 

யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் மீதான ஓர் புலனாய்வுப் பார்வை.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரவும், யாழ் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகரும் நீதியரசர் இளஞ்செழியன் இலக்கு வைக்கப்படவில்லை. என துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட முதலே அறிக்கை விட்டது தாக்குதல் சம்பவத்தின் பின்னணியை அதிர வைத்தது.
நல்லூர் ஆலய வீதியில் நீதிபதி மீதான துப்பாக்கிச் சூடு ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் சதி முயற்சி என்பதற்கு பொலிஸ் அதிகாரிகலின் கூற்றுக்கள் சுட்டி நிற்கின்றது.

இது நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான சந்தேகப் பார்வையினை ஏற்படுத்தியுள்ளது. நல்லாட்சி அரசினால் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு புலனாய்வு நடவடிக்கை இச் சூட்டுச் சம்பவம் என்பது புலனாகின்றது.

இன்றைய உலக ஒழுங்கு மற்றும் இலங்கைத் தீவின் அரசியல் நகர்வுகளின்படி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை கொல்லும் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. அப்படி கொலை செய்யப்பட்டால் அது அரசின் மீது சர்வதேச மட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் அபகீர்த்தி ஏற்படும் என்பதற்காகவும் நீதிபதி கொலை செய்யப்படாமல் அச்சுறுத்தல் நடவடிக்கை முன்னெடுத்திருக்கலாம்.

நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலைசெய்வதன்மூலம் நிதிபதியை அச்சுருத்துவதாக இருக்கலாம். பொலிஸ் தரப்புக்களின் கூற்றுக்களில் உண்மையும் உண்டு. நீதிபதியை கொலை செய்ய தாக்குதல் திட்டமிடப்படவில்லை. அரசிற்கும் பாதுகாப்பு படைக்கும் எதிராக தீர்ப்பு எழுதக்கூடாது என்பதற்கான அச்சுறுத்தலாக அமையலாம்

யாழ்ப்பாணத்தில் சீனியர் DIG யை சிறையில் அடைக்கப்பட்டது நல்லாட்சி அரசாங்கத்தை பாதிக்கலாம்,
மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்புக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை பாதிக்கக் கூடாது என்பதனை இத் தாக்குதல் அச்சுறுத்தல் இயம்புகின்றது. அதனால் இளஞ்செழியனை அச்சுறுத்துவதற்கு இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்பது தான் இங்கு பிரதமர் அரசாங்கம் சொல்லவரும் கருத்து ஆகும்.

மா.இளஞ்செழியன் அச்சுறுத்தப்பட்டால் அரசாங்கத்தின் நன் மதிப்பை பாதிக்கும் அல்லது தமிழ் மக்களை ஏமாற்றும் அரசின் நாடகம் மறைக்கப்படும் என்பதுதான் இத் தாக்குதல் நடவடிக்கையின் உள்நோக்கம் ஆகும்.

இதனை வெளிப் பார்வையில் அல்லது பாமர மக்களின் பார்வையில் மூடி மறைக்கும் நோக்கில் மது போதையில் இருந்த முன்னாள் போராளிகளின் விளையாட்டு வேலை இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என ஒரு திரைக்கதைவசனம் எழுதப்பட்டு அந்த வடிவத்தில் இந்த புலனாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

பல இராணுவத்தினரும், பொலிசாரும் இளஞ்செழியனால் அடைக்கப்பட்டது பாதுகாப்புத் தரப்பினரின் முகத்தில் கரி பூசிய செயலாக அரசும் பாதுகாப்புத் தரப்பும் நினைக்கின்றது.இராணுவத்தால் உருவாக்கப்பட்ட யாழ் வாள்வெட்டுக் குழுவினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததில் இளஞ்செழியனின் பங்கு முக்கியமானது.

அதே வேளை யாழ் மாவட்டத்தில் EPDP யின் அடாவடித் தனங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் EPDPயின் அடாவடி செயற்பாடுகளை முடக்கியதிலும் மா.இளஞ்செழியனின் கணிசமான பங்கு உண்டு.

இந்த பின்னணியில்தான் இளஞ்செழியன் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம் சீனியர் DIGயையும் சில பொலிஸ் அதிகாரியையும் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சிறையில் அடைத்ததன் மூலம் நீதியரசர் இளஞ்செழியன் மீதான புலனாய்வுப் பார்வை அவர் பக்கம் திரும்பியது.

தற்போதைய யாழ் மாவட்ட DIGயின் செய்தியும் பொலிஸ் ஊடகத்துறை பேச்சாளரின் அறிக்கைகளும் சுயாதீன செய்தியறிக்கை அல்ல. இது அரசாங்கத்தினால் திட்டமிட்டு வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் புனையப்பட்ட அல்லது தாக்குதல் நடவடிக்கை திட்டமிடப்பட்ட மூலோபாய வடிவத்தின் சாராம்சம்.

இங்கு முன்னால் போராளிகள் அச்சுறுத்தப்பட்டு அல்லது விலைக்கு வாங்கப்பட்டு தந்திரோபாய நடவடிக்கை ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. இச் சூட்டுச் சம்பவம் நன்கு புலனாய்வு ரீதியில் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கையாகும், இதன் பின்னணியில் நீண்ட அரசியல் உண்டு.

பாதுகாப்புத் தரப்பினரின் அல்லது அரச கைக்கூலிகளின் கரங்கள் உண்டு. அரசியல் இராணுவ, புலனாய்வு சூழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவ் நடவடிக்கை நிகழ்ந்திருக்கின்றது.
கடந்த காலத்தில் ஆட்சியாளர்களினால் உலகத்தினதும் மக்களினதும் பார்வையினை திசை திருப்புவதற்கு முன்னெடுக்கப்பட்ட இராணுவ, புலனாய்வு கபட நாடக நடவடிக்கைகளை தமிழ் மக்கள் அறியாதவர்கள் இல்லை.

உதாரணம்:
போருக்குப்பின் இராணுவத்தால் வடிவமைக்கப்பட்ட முனால் புலி உறுப்பினர்கள் அப்பன், கோபி மீள் உருவாக்கமும் அப்பாவி முன்னால் போராளிகள் இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட நடவடிக்கையும் இதில் இராணுவத்தால் அப்பன், கோபியை வழிநடத்திய தமிழ் இராணுவ அதிகாரியும் இராணுவத்தால் சுட்டுக் கொள்ளப்பட்டது இராணுவமே. இராணுவத்தை சுட்டுக்கொண்ட நடவடிக்கையுடன் அந்த நாடகம் முனால் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

அதேபோல் சாவகச்சேரியில் கடந்த ஆண்டு மீட்க்கப்பட்ட மனித வெடிகுண்டும் மஹிந்த ஆதரவு தரப்பு இராணுவத்தால் முன்னாள் போராளிகள் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து இலங்கையில் உள்ள முன்னாள் போராளிகளைப் ரமேஷ் குட்டிபயன்படுத்தி அரசியல் தேவைக்காக சிங்களவரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.

மேற்ப்படி நடவடிக்கை இரண்டும் பாதுகாப்புத் தரப்பினரால் முன்னாள் போராளிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான தாக்குதல் நடவடிக்கையும் பொலிஸ் தரப்பாலோ அல்லது இராணுவத் தரப்பாலோ அல்லது பாதாள உலகக்குழுக்களால் மற்றும் ஆயுதக் குழுக்களை பயன்படுத்தி அரசாங்கத்தினால் அரசாங்கத்தின் தேவைக்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்பதுதான் இங்கு உய்த்துணரப்பட வேண்டிய விடயம் ஆகும்.

சரணடைந்த முன்னாள் போராளி சுயமாக சரணடைந்தாரா? அல்லது சரணடைய வைக்கப்பட்டாரா? என்ற சந்தேகங்களும் இங்கு உள்ளது. விசாரணை நடவடிக்கையினை திசைதிருப்பவும், தடையங்களை அழிக்கவும் இச் சரணடைவு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளது. இதுதான் கடந்த கால வரலாறு.

பலிக்கடவாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிக்கு தப்பிக்க முயன்ற போது துப்பாக்கிச்சூடு என்ற செய்தி தான் நாளை வரும்.இவற்றை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நீதிபதி இளஞ்செழியன் மீதான நடவடிக்கை அரச பயங்கரவாத புலனாய்வு நடவடிக்கை என்பது புலனாகின்றது. இதனை முடி மறைக்க புலிகள் மீள் உருவாக்கம் என்ற கதை உருவாக்கப்படுகின்றது.

இலங்கை சிவில் தமிழ் மக்களுக்கு வட புலத்தில் ஜனநாயக நல்லாட்சிக்கு இடமில்லை என்பதனை சிறிலங்கா ஆட்சியாளர்கள் மீண்டும் ஒரு தடவை நிருபித்துள்ளார்கள். வேலியே பயிரை மேய்வதாக வடக்கின் பாதுகாப்பு நிலவரம் உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE