யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்கள் மீதான புலனாய்வுப் பார்வை[கட்டுரை ]

565

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழுக்கள் தோன்றுகின்றது. புதியபுதிய குழுக்கள் உடுவாக்கப்படுகின்றது. தேவைகள் ஏற்படுகின்ற போது எல்லாம் வாள்வெட்டு குழுக்கள் உருவாக்கப்படுகின்றது. அதற்கு ஆவா குறூப் என்னும் பெயர் சூட்டப்பட்டிருகிறது.

இது சமூக விரோத செயற்பாடு எனவும், குற்றவியல் நடவடிக்கை இல்லை என்ற பாணியில் இது புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளின் தொடர்ச்சி என்ற வகையிலும் அரசு கதைவிடுவதும் வேடிக்கையாக உள்ளது. புலிகள் மீள் உருவாக்கம் நிகழ்கின்றது. புலிகள் தாக்குதல் நடத்தினர் என்ற வடிவத்திலும் கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய சுந்திர கருத்து வெளியிட்டுள்ளார்.

முன்னாள் விடுதலை புலிகள் யாழ் குடா நாட்டில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது தான் அரசாங்கம் சொல்ல வரும் கருத்து ஆகும். உண்மையில் இங்கு என்ன நடக்கின்றது…? அரசாங்கம் குடா நாட்டை எப்படி டீல் பண்ணுகின்றது…? வெளிப்படையாக என்ன செய்தியை சொல்ல முன்வைக்கின்றது. மறைமுகமாக என்ன செய்ய முனைகிறது அரசும் படைத்தரப்பும் பொலிஸ் தரப்பும் உண்மையில் எப்படி செயற்படுகின்றது என்பது பற்றித்தான் ஆராய்கிறேன்.

யாழ்ப்பாணம் அமைதியான சுதந்திரமான மகிழ்ச்சியான இடமாக உள்ளது. அதை முன்னாள் புலிகள் குழப்புகின்றனர் தமிழர் ஆகிய நீங்கள் இலங்கை அரசுக்கும் பாதுகாப்பு படைக்கும் துணையாக வாருங்கள் என்று வெளிப்படையாக அரச பிரதிநிதிகள் அறிவிக்கின்றார்கள்.
அரசதரப்பு அதிகாரிகள் கருத்துக்களை அப்படியே கேட்கும் அளவுக்கு தமிழரும் உலகமும் குழந்தைகள் அல்ல.

உண்மையில் இங்கு என்ன நடக்கின்றது…? அரசாங்கம் குடா நாட்டை எப்படி டீல் பண்ணுகின்றது…? வெளிப்படையாக என்ன செய்தியை சொல்ல முன்வைக்கின்றது. மறைமுகமாக என்ன செய்ய முனைகிறது அரசும் படைத்தரப்பும் பொலிஸ் தரப்பும் உண்மையில் எப்படி செயற்படுகின்றது என்பது பற்றித்தான் ஆராய்கிறேன்.

அரச பாதுகாப்பு படைகளினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தான் ஆவா குழு. ஆவா குழு என்ற பெயரில் ஆட்களை திரட்டி ராணுவப் புலனாய்வுப் பிரிவு (mi) சில ஒப்ரேசன் செய்கின்றார்கள். அவர்கள் வாள்வெட்டு தெரு சண்டியராக உருவாகியுள்ளனர்.யுத்தம் முடிவடைந்த பின்னர் 2011, 2012 காலப்பகுதியில் கிறிஸ்மான் ஒப்பிரேசன் என்ற ஒரு நடவடிக்கை அi முன்னெடுத்தது . அதேபோல் ஆவா குழுவும் இராணுவ புலனாய்வுக் குழுக்களினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.

யாழ்ப்பாணத்தில் களநிலவரங்களை குழப்பியடித்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கங்களை ரணில் அரசு தரப்பு, மஹிந்த அணி தரப்பு, பாதுகாப்பு தரப்பு பொலிஸ் தரப்பு மற்றும் ஆட்சியாளர்கள் தமக்கு தேவைப்படும் போது எல்லாம் அரசியல் காரணங்களுக்காக சில நாசகார சதி நடவெடிக்கைகள் முன்
எடுக்கின்றார்கள்.

இந்த நாசகார சதி புலனாய்வு நடவடிக்கைகள் முன்னேடுக்கபடுவதற்கு முன்னாள் போராளிகள் விலைக்கு வாங்கப்படுகின்றார்கள் அல்லது அச்சுறுத்தி சில வேலைகளை செய்விக்கப்படுகின்றார் அல்லது திட்டமிட்டு அவர்கள் அதில் பலிக்கடாவாக்கப்படுகின்றார்கள்.
அல்லது யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மதுபானங்கள் கஞ்சாக்களை வழங்கி அவர்களை ஆவா குறூப் போன்று உருவாக்கி தங்கள் தேவைக்கு பயன்படுத்தப்படுகின்றார்கள். இது முழுக்க முழுக்க அரச தரப்பின் கொள்கைக்காகவும் தேவைக்காகவும் உருவாக்கப்படுகின்ற குழுக்களும், நடவடிக்கைகளும் ஆகும். இங்கு புலிகள் பெயர் வலிய இழுத்து முடிச்சுப்போடப்படுகின்றது.

யாழ்குடா நாட்டுக்குள் புலிகள் தலை தூக்குகின்றார்கள். நீதிபதி இளஞ்செழியனை சுடுகின்றார்கள் பொலிசாரை வெட்டுகின்றனர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து மனித வெடி குண்டுகளை சாவகச்சேரிக்கு முன்னால் புலிகள் கொண்டுவருகிறார்கள் அதனால் புலிகள் மீள் உருவாக்கம் அரும்புகிறது எனவே பாதுகாப்பு முப்படைகளை யாழ்ப்பாணத்தில் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்கான நாடகமே இது என்பது தான் 30.07.2017ல் யாழ் வந்த பொலிஸ்மா அதிபர் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. புலிகள் சம்மந்தப்பட்டுள்ளனர். ஆகவே இராணுவத்தினர் கடற்படை வான்படையினர் ஆதரவுடன் நிலமைகளை கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப் போவதாக அறிவிக்கின்றார்.

குற்றச்செயல்களை திட்டமிடுவதும், செய்விப்பதும், அவர்களே. அதை செய்வதும் அவர்களே. அதை அடக்கப்போவதாக கட்டுப்படுத்தப் போவதாகவும் அறிக்கை விடுவதும் அவர்களே. இது என்ன வேடிக்கை.

பொலிஸ் தலைமையகமான கொழும்பில் அமைந்துள்ள புதிய செயலக கட்டிடத்தில் 2ம் மாடியில் நடக்கும் TID பயங்கரவாதத்தில் புலனாய்வுப்பிரிவு மற்றும் நாலாம்மாடி CID குற்றவியல் புலனாய்வு பிரிவுகளின் கோவைகளின்படி போருக்குப்பின் குடாநாட்டில் நடந்த அனைத்து வன்முறைகளிலும் பாதுகாப்பு படையினர் Mi சம்மந்தப்பட்டுருப்பது பொலிஸ்மா அதிபர் அறியாத விடையம் இல்லை.

புலிகள் வீழ்ச்சிக்குப் பின்னர் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பத்தாகவும், தமிழர்களை அடக்கவும் ஆளவும் மட்டம் தட்டவும் அத்துடன் ஜ.நா வையும் உலக நாடுகளின் இராஜ தந்திர நடவடிக்கைகளையும் சமன் செய்யவும் இலங்கை தீவின் ஆளும் வர்க்கத்தினாலேயே எல்லாகாரியமும் சதி செயல்களும் குற்றச் செயல்களும் அரங்கேற்றப்படுகிறது.

எல்லாம் அரசின் செயல்களே படைப்பதும் அவர்களே, காப்பதும் அவர்களே, அளிப்பதும் அவர்களே, குற்றவாளிக்கு அருள்வதும் அவர்களே.தமிழனை பயன்படுத்தி தமிழனை அடிக்கின்றார்கள். அரசு இல்லாத தமிழன் ஆடுகின்றான் தமிழனே தமிழனை அளிக்கின்றான்.. பாவம் தமிழன்
மோட்டுச் சிங்களவன் என்று முதாதையர் சொன்னது எல்லாம் பொய்யாச்சு பீத் தமிழன் என்று சொல்கிறான் சிங்களவன் எது சரி எது பிழை.

யாழ்ப்பாணம் – மன்னார் ஊடாக இந்தியாவிலிருந்து தாராளமாக போதைப்பொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் சிங்கள உயர் மட்ட வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஆவார்கள். இவர்களினால் வழி நடத்தப்படுகின்ற பாதாள உலகக் குளுக்கள் தான் போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள். இந்த உயர் வர்க்கத்திற்கு பாதுகாப்பு தரப்பின் துணையும் உண்டு.

இதனுடனிணைந்தே Mi யும் CID யும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதை வஸ்த்து பழக்கத்தை உருவாக்கி வருவதுடன் மாணவர்களுக்கு குறைவிலையிலும் போதைப்பொருட்கள் வழங்கப்படுகின்றது. இனிப்பு பண்டங்கள் மாற்று பீடா வெற்றிலை ஆக விற்பனை குழுக்கள் உடாகவே ஆவா குழு உருவாக்கப்படுகின்றது. இதனுடன் முன்னாள் போராளிகள் பெயரும் திட்டமிட்டு அடிபட விடப்படுகிறது. இப்படித்தான் ஆவா குழுக்கள் உருவாக்கப்படுகின்றார்கள் ஆவா குழு உறுப்பினரும் பொலிசாரும் பாதுகாப்பு தரப்பினரும் நல்ல நண்பர்களே. அரசியல் தேவைக்காக அரசியல் நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் அரசியல் காரணங்களுக்காகவே அனைத்து வன்செயலிலும் நடை பெறுகின்றது.

யாழ்ப்பாணத்தில் அரசியல் தேவைக்காக அரசியல் நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் அரசியல் காரணங்களுக்காகவே அனைத்து வன்செயலும் நடை பெறுகின்றது.புலிகளுக்கும் புலிகளின் கொள்கைக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. எல்லாம் அரசும் படையினரும் ஆட்சியாளர்களின் நாடகமாகும்.இந்த கூத்தரங்கில் சில தமிழர்கள் பலிக்கடாவாக்கப்படுவதன் மூலம் ஒட்டு மொத்த தமிழரும் ஏமாற்றப்படுகின்றார்கள்.

ரணில் அரசாங்கத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு உற்பட்ட TID, CID தனிநாட்டு புலனாய்வுச்சேவையாகவும்இ இராணுவத்தினரின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வுச் சேவையகம் MI வேறு நாட்டு புலனாய்வுச் சேவையாகவும் நல்லாட்சி அரசாங்கத்தில் இயங்குகின்றது.

NIB எனப்படும் தேசிய புலனாய்வுப்பணியகம் பொலிஸ் திணைக்களத்திற்கும் பாதுகாப்பு பிரிவுகளின் பனிப்போர்களை மதிப்பீடு செய்யும் 3ம் தரப்பாக உள்ளது.இலங்கை அரசின் உள்ளக புலனாய்வு சேவைக்குள் இருக்கும் முரண்பாடுகளினால் பாதிக்கப்படுவது தமிழர்கள்.

பிள்ளையை கிள்ளுவதும் தொட்டிலை ஆட்டுவதும் இப் புலனாய்வு அமைப்புக்களே.
யாழ்குடா நாட்டுக்குள் இடம் பெறுகின்ற அனைத்து வன் செயல்களிலும் ஒரு அரசியல் பின்னணி உண்டு. எல்லா நகர்வுகளுக்கும் புலனாய்வு ரீதியில் திட்டமிடப்பட்டு இலங்கை அரசின் புலனாய்வு அமைப்புக்களான TID பயங்கரவாத புலனாய்வு திணைக்களம் CID குற்றவியல் புலனாய்வுத்திணைக்களம் NIB தேசிய புலனாய்வுப்பிரிவு, MI இராணுவ புலனாய்வுச்சேவை ஆகியவற்றின் எதாவது ஒரு நடவடிக்கையாக அமைந்திருக்கும்.

எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் எதாவது ஒரு புலனாய்வு திணைக்களகத்தின் பின்னணி இருக்கும். அரசின் அல்லது தென் இலங்கை நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழுக்கள் தோன்றுகின்றது. புதியபுதிய குழுக்கள் உருவாக்கப்படுகின்றது. தேவைகள் ஏற்படுகின்ற போது எல்லா வாள்வெட்டு குழுக்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆவா குறூப் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அல்லது புலிகளின் மீள் உருவாக்கம் என பெயர் சூட்டப்படுகின்றது. குற்றவாளிகள் தப்புகின்றார்கள். தப்பிக்க விடப்படுகின்றார்கள். பொலிசாரே தடயங்களை அழிக்கின்றார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE