வரலாறு படைக்கும் ரஜினிகாந்தின் 2.0 கூட்டணி

70

சூப்பர் ஸ்டார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. ஷங்கர் இயக்கி வரும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் 400 கோடிக்கு உருவாகி வரும் 2.0 படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி வெளியாக உள்ள இப்படத்தின் விரிவாக்கல் பணிகள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், 2.0 படத்தின் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான தெலுங்கு விநியோக உரிமையை குளோபல் சினிமா நிறுவனம் அதிக பொருட்செலவில் வாங்கியிருப்பதாக லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜு மகாலிங்கம் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
இது ஒரு வரலாறு படைக்கும் கூட்டணி என்றும் அவர் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE