ஜப்பான் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் மும்பை அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம்

335

 

புதுடெல்லியில் : ஜப்பான் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தொடங்கப்படும் மும்பை அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்ட பணிகளை அடுத்த மாதம் இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே கூட்டாக தொடங்கி வைக்கிறார்கள். ஜப்பான், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும் புல்லட் ரயில்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. பாஜ தலைமையில் நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டத்துக்கு புதிய உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை ஜப்பான் சென்ற போது இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அபேவுடன் மோடி ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி முதல் கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு புல்லட் ரயில் விட முடிவு செய்யப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை ஏற்கனவே தயாா் செய்யப்பட்டு ஓகேவும் பெறப்பட்டுள்ளது. 2017 ல் தொடங்கும் இந்த பணிகள் 2023ல் முடிவடையும். இந்நிலையில் இதற்கான திட்டப்பணிகளை அடுத்த மாதம் அகமதாபாத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாவில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் அபேவும் கூட்டாக தொடங்கி வைக்கிறார்கள். இதற்காக அடுத்த மாத இறுதியில் ஜப்பான் பிரதமர் இந்தியா வருகிறார். மும்பை புல்லட் ரயிலை தொடர்ந்து புதுடெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னையை அதி வேக ரயில்கள் மூலம் இணைக்கும் திட்டத்தையும் ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இரு தலைவர்களும் பேசுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவு படுத்துவது குறித்தும் அடுத்த மாத சந்திப்பில் இரு தலைவர்களும் பேச இருக்கிறார்கள்

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE