தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் திருகோணமலை மாவட்ட மக்கள் சந்திப்பு[படங்கள் இணைப்பு]

109

இன்று காலை 11.00 மணிக்கு திருகோணமலையில் அமைந்துள்ள செவிப்புலன் வலுவுற்றோர் நிலையத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உருப்பினருமாகிய வினாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்), கட்சியின் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ. மற்றும் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் உற்பட பலர் கலந்துகொண்டனர்

இதில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் அவர்கள் வடகிழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல காலமாக மக்களை ஏமாற்றிவருகிறது அதன் அடிப்படையில் பலமான ஒரு மாற்றுக் கடசி தமிழ் மக்களுக்குத் தேவை எனும் நோக்கில் நாம் இக்கட்சியை ஆரம்பித்திருக்கின்றோம்.

முன்னாள் போராளிகள் சிறந்தமுறையில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும், யுத்தத்தில் கணவனை இழந்த குடும்பத்தலைவிகளது பிரச்சினைகள் இவை தீர்க்கப்பட வேண்டும்

இந்த அரசாங்கம் ஊழலை ஒளிக்கவேண்டும் என்றே ஆட்சிக்கு வந்தது இருப்பினும் ஊழல் ஒளிந்ததாக தெரியவில்லை. மகிந்தவின் அரசினை சாடினார்கள் ஆனால் இது வரை அந்த குற்றங்கள் கூட நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறிருக்க இந்த அரசிலும் தற்போது ஊழல்
அது வடமாகாண சபையையும் விட்டுவைக்கவில்லை என தெரிவித்தார்

கடந்த அரசு ஆட்சியில் இருக்கும்போது மக்களிடம் பணப்புழக்கம் இருந்தது அபிவிருத்திகள் நடைபெற்றது வேலை வாப்புகள் வளங்கப்பட்டது ஆனால் இந்த நல்லாட்சியில் என்ன நடக்கிறது இந்த அரசிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துணைபோகின்றது என தெரிவித்தார்

மேலும் கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழன் முதலமைச்சராக வேண்டும் அதன்மூலமாக வட கிழக்கை ஒன்றிணைத்து பல செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியும் எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட
SHARE