பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வருவேன் :ஓவியா

984

பிக் பாஸ் வீட்டில் காதல் தோல்வியால் மனமுடைந்த ஓவியா அங்கிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய கையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி படுத்துவிட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்ன செய்தாலும் டிஆர்பி மட்டும் ஏற மாட்டேன் என்கிறது.
ஓவியா வெளியேறிய கையோடு ஓவியா ஆர்மிக்காரர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்திவிட்டனர். ப்ரமோ வீடியோவை கூட பார்க்க ஆள் இல்லை.
பிக் பாஸ் ஓவியா போன பிறகு நிகழ்ச்சி மரண அடி வாங்கிவிட்டதை பிக் பாஸ் உணர்ந்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருமாறு ஓவியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்களாம்.
ஓவியா இந்த வார இறுதியில் ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
சம்பளம் முன்னதாக வாரத்திற்கு இந்திய ரூ.2.5 முதல் 3 இலட்சம் சம்பளம் வாங்கினார் ஓவியா.
தற்போது பிக் பாஸிடம் கூடுதல் சம்பளம் கேட்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE