மாவா போதைப்பொருளுடன் 6 பேர் கைது

303

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹற்றன் பேருந்து தரிப்பிட பகுதியில் இன்று பிற்பகல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் போது மாவா போதைப்பொருள் மற்றும் என்.சி புகையிலை டின்களுடன் சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதன்போது 75 என்.சி புகையிலை டின்கள் உட்பட சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு 80 பக்கட்டுகளில் பொதி செய்யப்பட்ட ஒரு தொகை மாவா போதைப்பொருள் மற்றும் தயாரிப்பிற்கான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் போதைப்பொருளை பணம் கொடுத்து வாங்கிய 5 இளைஞர்கள் ஆகியோரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஹற்றன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE