வவுனியா பண்டாரிக்குளத்தில் டெங்கு சிரமதானம்[படங்கள் இணைப்பு]

352
????????????????????????????????????

 

வவுனியா பண்டாரிக்குளத்தில் டெங்கு சிரமதானப்பணி இடம்பெற்றது.
நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கினால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்படுவதை தடுப்பதற்காக வவுனியாவில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பண்டாரிக்குளத்தில் பிரஜைகள் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. கிராமத்தையும், மக்களையும் பாதுகாக்கும்
பொருட்டு சுற்றாடலில் நீர் தேங்கி நிற்காத வண்ணம் சுத்தம் செய்வதோடு வீட்டில் தேங்கி கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றி வேறுவேறாக பிரித்து இன்றைய தினமும் நாளைய தினமும் இரு பிரிவாக பண்டாரிக்குளத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கையில் சுகாதார பரிசோதகர்கள், நகரசபை ஊழியர்கள், கிராம மக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
உங்கள் கருத்துக்களை பதிவிட
SHARE