கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேரமுடிவில் இந்திய அணி

404

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகலையில் இடம்பெறும், 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 119 ஓட்டங்களையும், லோகேஸ் ராகுல் 85 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்று கொடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் 188 ஓட்டங்களுக்கு எவ்வித விக்கெட்டுகளையும் இழக்காதிருந்த இந்திய அணியின் விக்கெட்டுகள் இலங்கை அணியின் பந்துவீச்சில் சரிய ஆரம்பித்தன.

ஷிகர் தவான் 119
லோகேஸ் ராகுல் 85
விராத் கோலி 42

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில்
மலிந்த புஷ்பகுமார 3/40
லக்‌ஷான் சந்தகன்
2/84

மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-0 என இந்திய அணி வெற்றி பெற்று தொடரை தன்வசமாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE