இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் நிலநடுக்கம்;இலங்கையில் சுனாமி எச்சரிக்கை

784

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சுமார் 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவிவில் ஏற்பட்டுள்ளது.சுமத்திரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை அவதான மையம் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE