இலங்கைக்கு கடத்தப்படவிருந்த செம்மரக்கட்டைகள் கைப்பற்றல்

383

 

தமிழகம் தூத்துக்குடி பகுதியில் இலங்கைக்கு கடத்தப்பவிருந்த மூன்று டொன் செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்திய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஊடாக இலங்கைக்கு செம்மரக் கட்டைகள் கடந்த காலங்களில் கடத்தப்பட்டுவந்துள்ளதாக சுங்கவரித் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் படகு மூலம் இலங்கைக்கு செம்மரக்கட்டைகளை கடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த செம்மரக்கட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவி;க்கப்படுகின்றது.

கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு பீடீ இலைகள் கடத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட
SHARE