இலங்கைக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீளபெறப்பட்டது

221

 

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவை அண்டிய பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீளபெறப்பட்டுள்ளது.

6.5 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமாத்ரா தீவின் மேற்காக 81 கிலோமீற்றர் தொலைவில் 67 கிலோமீற்றர் கடல் ஆளத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என காலநிலைய அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE