இளைஞன் மீது கொலை முயற்சி: வாகனம் அடித்துடைப்பு-நிலாவரையில் சம்பவம்

2685

புத்தூர் நிலாவரை சந்திபகுதியில் அதிகாலை கடைக்கு பொருட்கள் கொள்வனவு செய்ய சென்ற இளஞனின் வாகனத்தை வழிமறித்த இனந்தெரியாத மர்மகும்பல் வாளினால் இளைஞனை துரத்தி வெட்ட முற்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நிலாவரை பகுதியில் பெரும் அச்சத்த்தினை ஏற்படுத்தியுள்ளது. இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் ஆவரங்கால் சர்வோதயா வீதியினை சேர்ந்த அருளம்பலம் அருட்செல்வன் சிறு காயங்களுக்கு உள்ளானதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது இளைஞன் பயணித்த பட்டா ரக வாகனம்( Px-2459) மர்ம நபர்களினால் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து சாரதியாக மேற்படி நபர் கடமையாற்றுவதாவும், தனிப்பட்ட விரோதமே சம்பவம் இடம்பெற்றதிற்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்குமுன்னரும் இவ்வாறான சம்பவம் கோப்பாய் பிரதேச செயலத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. மர்ம நபர்கள் வந்த வாகனம் தொடர்பில் அப் பகுதியில் உள்ள சீசீரீவீ கமராவின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE