இந்தியா மல்யுத்த வீரர் தி கிரேட் காலியும், நட்சத்திர விராட் கோலியும் இலங்கையில்சந்திப்பு.

449

இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் தி கிரேட் காலியும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் இலங்கையில் நண்பர்கள் தினத்தையொட்டி சந்தித்துள்ளனர்.

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தலீப் சிங் ராணா. 2.16 மீட்டர் உயரமும் 157 கிலோ எடையுடன் மாமிச மலையாக வலம் வந்த இவர், அமெரிக்காவில் நடைபெற்றுவரும் WWE எனும் மல்யுத்த போட்டியில் பங்கேற்று உலக கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்நிலையில், தி கிரேட் காலி என்று அழைக்கப்படும் தலீப் சிங் ராணாவும், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் சொகுசு ஹோட்டலில் சந்தித்து பேசியுள்ளனர். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இருவரும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக சுற்றி வருகின்றது.

இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விராட் கோலி, ”தி கிரேட் காலியுடன் சிறப்பான சந்திப்பு. என்ன மாதிரியான மனிதர் அவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE