உழவு இயந்திரத்தினை கைவிட்டு தப்பியோட்டம்

664

அரியாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திர சாரதிகள் பொலிஸாரினை கண்டதும் உழவு இயந்திரத்தினை கைவிட்டு தப்பி சென்ற சம்பவம் நேற்று(12) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உப பொலிஸ்பரிசோதகர் சூரியகுமார் சொருபன் அவர்களின் தலமையில் சென்ற பொலிஸார், மண் கடத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்டனர். இதன் போது மண் கடத்தல் காரர்கள் சிவில் உடையில் சென்ற பொலிஸாரினை கண்டதும் தப்பியோடியுள்ளனர். மீட்கப்பட்ட இரு உழவு இயந்திரங்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE