ஊடகங்களை விமர்சித்துள்ள சுகாதார அமைச்சர்

154

டெங்கு தொடர்பான சரியான தகவல்களை ஊடகங்கள் வழங்க தவறுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சுமத்தியுள்ளார்.
‘நாங்கள் தொடங்குவோம்-டெங்குவை ஒழிப்போம்’என்னும் தொனிப்பொருளின் கீழ் பன்னிப்பிட்டியவில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டப் போதே சுகாதார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோயாளர்களின் அல்லது டெங்கு மரணங்கள் குறைந்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுவது இல்லை என்றும்ஊடகங்கள் செய்திகளை தவறாக தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் டெங்கு அதிகரிக்கும் பட்சத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிடும் ஊடகங்கள் டெங்குவின் தாக்கம் குறைவடையும் போது அதனை வெளிப்படுத்துவது இல்லை என்றும்இகுற்றஞ்சுமத்தியுள்ளார்.
ஊடகங்கள் தவறுகளை மட்டும் பெரிதுப்படுத்துவதாகவும் கடந்த 45 வருடங்களுக்குப் பிறகு 48 மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் ஊடகங்கள் எதனையும் தெரிவிக்கவி;ல்லை என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE