அமெ­ரிக்க நிறு­வனம் மாய­மான மலே­ஷிய விமா­னத்தை மீண்டும் தேடு­வ­தற்­கான பணி­களை ஆரம்­பிக்­க­வுள்­ளது.

360

நடு­வானில் மாய­மான மலே­ஷிய விமா­னத்தை மீண்டும் தேடு­வ­தற்­கான பணி­களை அமெ­ரிக்க நிறு­வனம் ஒன்று ஆரம்­பிக்­க­வுள்­ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலே­ஷியன் ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச். 370), மலே­ஷிய தலை­நகர் கோலா­லம்­பூரில் இருந்து சீனத்­த­லை­நகர் பீஜிங் நோக்கி புறப்­பட்டு சென்­ற­போது, நடு­வானில் திடீ­ரென மாய­மா­னது.

இந்த விமா­னத்தை தேடும் பணியை மலே­ஷியா, அவுஸ்­தி­ரே­லியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து ஏறத்­தாழ 3 ஆண்­டுகள் நடத்­தின. இந்­தியப் பெருங்­க­டலில் 1 லட்­சத்து 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப்­ப­ளவு தேடியும், மாய­மான அந்த விமா­னத்தைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. இதன்­கா­ர­ண­மாக அந்த விமா­னத்தைத் தேடும் பணி கடந்த ஜன­வரி மாதம் 17 ஆம் திகதி நிறுத்­தப்­பட்­டது.

இந்த விமா­னத்தில் பயணம் செய்த 239 பேரும் பலி­யாகி விட்­ட­தாக நம்­பப்­ப­டு­கி­றது. ஆனால் அவர்­க­ளது குடும்­பத்­தினர், மாய­மான விமா­னத்தை தேடும் பணியை தனி­யார்­வசம் ஒப்­ப­டைக்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இந்த நிலையில் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த தனியார் கடற்­ப­டுகை ஆய்வு நிறு­வ­ன­மான ஓசியன் இன்­பி­னிட்டி, மாய­மான மலே­ஷிய விமா­னத்தை தேட முன்­வந்­துள்­ளது.

இதை மலே­ஷிய அரசு ஏற்­றுக்­கொள்ளும் என நம்­பு­வ­தாக அந்த நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

இது­பற்றி அந் நிறு­வனம் குறிப்­பி­டு­கையில், “ இந்த வாய்ப்பின் விதி­மு­றைகள் ரக­சி­ய­மா­னவை. ஆனால் நாங்கள் முன்­வந்­தி­ருப்­பதை உறு­தி­பட தெரி­விக்­கிறோம். பொரு­ளா­தார இடர்­களை பொருட்­ப­டுத்­தாமல், இந்தப் பணியை மேற்­கொள்ள முன் வந்­துள்ளோம். நாங்கள் சம்­பந்தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுடன் ஆக்­க­பூர்­வ­மான பேச்சு வார்த்தை நடத்­து­கிறோம். எங்கள் விண்­ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறோம்” என கூறியுள்ளது.

இது தொடர்பாக மலேஷியா விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE