காணி தொடர்பில் சம்பந்தன் ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம்

356

 

கோப்பாப்புல மக்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படுவதன் அவசியம் குறித்து எதிர்கட்சித் தலைவர் ராஜவரோதயன் சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரபால சிரிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஆயுத போராட்டம் நிறைவடைந்து 8 வருடங்கள் ஆகிய நிலையில் இந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த காணிகளுக்கு செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு தசாப்த காலத்திற்கும் மேலான காலப்பகுதியினில் தமது காணிகளை விட்டு வெளியேறியுள்ள இந்த மக்கள் தமது காணிகள் மீள அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கடந்த 165 நாட்களாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி கூடிய விரைவில் இந்த மக்களின் காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராஜவரோதயன் சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி வேண்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE