குற்றம் புரிந்தவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் – மகிந்த அமரவீர

95

 

 

அரசாங்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், குற்றம் புரிந்தவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருக்கும் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் முன்னோடியான ஒரு உதாரணத்தை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் குற்றம் புரிந்தவர்கள் எந்த அரசாங்கத்தில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலையில் மாற்றம் இல்லை எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE