சிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை முதலமைச்சரினால் இனி அமைக்கமுடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் – சி. சிறீதரன் எம்.பி

118
????????????????????????????????????

 

 

சிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை முதலமைச்சரினால் இனி அமைக்கமுடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.
வவுனியா கனகராயன்குளம் புதுக்குளத்தில் தங்கம்மா முதியோர் இல்லம் கலாநிதி முருகர் குணசிங்கத்தால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கும் நிகழ்விலும் இலங்கை தமிழர் நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்..தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்

வடகிழக்கு இணைந்த மாகாணசபையை கொண்டு செல்வதில் இருந்த இடையூறுகளை தாண்டி இணைந்திருந்த வடகிழக்கு 18 ஆண்டுகளிற்கு பின்னர் பிரிக்கப்பட்ட பின் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் 2006ம் ஆண்டு நடாத்தப்பட்டது. அதன் பின்னராக 2013ம் ஆண்டு வடக்கு மாகாணத்திற்கான தேர்தலை சந்தித்து மக்களுடைய பாரிய பங்களிப்போடு ஒரு சபையை அமைத்து எங்களிற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளோடு இணைந்த உரிமைக்காக பயணத்தை மேற்கொண்டு வருகின்றோம். இதன் போது நாங்கள் சரியான பாதையில் எங்களை கொண்டு செல்வதில் பல தடங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பல்வேறு பட்ட காரணங்கள் சொல்லப்பட்டாலும், 2013ம் ஆண்டு முதலமைச்சர் தலைமையில் நான்கு அமைச்சர்களை கொண்டு அமைக்கப்பட்ட அமைச்சர் குழு போல் இனி வருமா? அல்லது அமைச்சர் வாரியத்தை கொண்ட பெறுமதியான குழுவினை முதலமைச்சரினால் உருவாக்கிக்கொள்ள முடியுமா? என்ற கேள்விகள் எல்லோர் மத்தியிலும் இருக்கின்றன.

நாங்கள் தேசிய அரசியல் பிரச்சனைக்கான தீர்வு காண்பதற்காக பல்வேறுபட்ட காலங்களில் பல முயற்சிகளை எடுக்கப்பட்டிருக்கிறது. அது தந்தை செல்வா காலமாக இருக்கலாம், பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லீ – செல்வா ஒப்பந்தம், இந்திய இலங்கை ஒப்பந்தம் உட்பட சந்திரிக்காவால் கொண்டுவரப்பட்ட போது அதற்கு பிற்பாடு பிரமதாஸா காலத்தில் பேசப்பட்ட விடயங்கள், அதற்கு பிற்பாடு 19 தடவைகள் மகிந்த ராஜபக்ச காலத்தில் அவர்களுடைய கட்சி ரீதியாக பேசியிருக்கிறார்கள். இதை விட தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியான விடுதலை பயணத்தை மேற்கொள்ளும் போது ஒஸ்லோவில் வைத்து பேசிய பேச்சுக்கள், இடைப்பட்ட காலப்பகுதியில் பல்வேறுபட்ட அரசுடன் அவர்கள் பேசி ஒரு சுமுக நிலையை உருவாக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாமே இன்று ஒரு மாறுபட்ட சூழலுக்கு வந்திருக்கின்றது.

நாங்கள் எல்லாவற்றையும் இழந்த மனிதர்களாக அல்லது ஏதோ ஒரு கொப்பை பிடிக்க முடியாதவர்களாக மாறிவிடுவோமா என்ற பயமும் ஏக்கமும் எங்களிடம் இருக்கின்றது. இதைதான் நாங்கள் கடந்து செல்ல வேண்டும். எங்களிற்கு இருக்கின்ற பிரச்சனைகள் தென்னிலங்கைக்கோ வெளி சமூகத்திற்கோ பெரிதாக கொண்டு செல்லப்படுகின்ற போது தமிழர்களுடைய உண்மையான வரலாறு மழுங்கடிக்கப்படுகின்றது. அவர்களுடைய தேசிய இலக்கு என்ன நோக்கத்திற்காக புறப்பட்டோமோ எந்த இலக்கு நோக்கி பயணப்பட்டோமோ அவற்றில் இருந்து நழுவிச்செல்லக்கூடிய சூழலை எங்களிடம் உருவாக்க பலர் விளைகிறார்கள். இதற்கு தென்னிலங்கையில் உள்ளவர்கள் எங்களை தன்னாட்சி அற்றவர்களாக மாற்றியிருக்கின்றார்கள்

இந்த சூழலில் இருந்து மாறுவதற்காகதான் 1949இல் தந்தை செல்வாவில் இருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கையாக எங்களுடைய கட்சியும் முன்னெடுத்துச் சென்றது. அதில் இருந்து இம்மியளவும் விலகிச்செல்லவில்லை. சமஸ்டி அடிப்படையிலே எங்களுடைய மண்ணுக்கான தீர்வு முயற்சிகளில் எங்களுடைய பயணங்களில் சரியாக பயணிக்க வேண்டிய ஒரு காலத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம். இதில் பல்வேறுபட்ட பிரச்சனைகள் சொல்லப்படலாம், பல்வேறுபட்ட நெருக்கடிகள் எங்கள் மீது திணிக்கப்படலாம். எங்களை துண்டு துண்டாக்கி எங்களுடைய இருப்பை தள்ளிவிடுகின்ற முயற்சிகளில் பல்வேறுபட்ட தரப்புக்களால் எடுக்கப்படுகின்ற சூழலில்தான் நாங்கள் நிதானமாகவும், கவனமாகவும் எங்களுடைய பாதங்களை பதிக்க வேண்டி இருக்கின்றது. இதன் காராணமாகதான் எல்லோருடைய எண்ணங்களும் ஒரு பாதையிலே பயணிக்கப்பட வேண்டும். நாங்கள் ஒற்றுமை என்ற ஒன்றிணைந்த பயணத்தின் ஊடாகதான் இதனை அடைய முடியும்.

இதில் நான் பெரிது நீ பெரிதென்றோ அல்லது எங்களுக்குள்ளே பல்வேறுபட்ட பகை முரண்பாடுகளை கொண்டோ, ஒரு இலக்கை நோக்கி செல்ல முடியாது. ஒருவரை குற்றம் சொல்லுதல் அல்லது குற்றத்தை கண்டு அவரை வெளியே விடுவது ஊடாக ஒரு இனத்திற்கான தீர்வை அடைந்து கொள்ள முடியாது. ஆனால் குற்றங்கள் இருக்கின்றன என்றால் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் கையாள வேண்டும். அவ்வாறு கையாண்டு கொண்டு தமிழ் மக்களுடைய இன்றைய காலகட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு காலச்சூழல் மாற்றத்திற்குள் நாங்கள் இருக்கின்றோம் என தெரிவித்தார்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE