ரியல் மாட்ரிட் அணிசுப்ப கிண்ண கால்பந்து போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.

165

சுப்ப கிண்ண கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2 1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

 

மாசிடோனியாவில் சுப்ப கிண்ண கால்பந்து போட்டி நடந்தது. இதில் சம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர்களின் நடப்பு சம்பியன்களான முறையே ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), மான்செஸ்டர் யுனைடெட் ( இங்கிலாந்து ) அணிகள் மோதின.

 

அபாரமாக ஆடிய “நடப்பு சம்பியன்’ ரியல் மாட்ரிட் அணி 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது. ரியல் மாட்ரிட் சார்பில் கேஸ்மிரோ (24 ஆவது நிமிடம்), இஸ்கோ ( 52 ஆவது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு லுகாகு ( 62 ஆவது நிமிடம் ) ஆறுதலளித்தார்.

 

இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணி, நான்காவது முறையாக
சுப்ப கிண்ணத்தை வென்றது. பார்சிலோனா ஸ்பெயின் , மிலன் இத்தாலி, அணிகள் அதிகபட்சமாக தலா 5 முறை சுப்ப கிண்ணத்தை வென்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE