தமிழரசுக் கட்சியுடன் தனித்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை எட்ட ரெலோ விருப்பம்

135

 

தமிழரசுக் கட்சியுடன், தனித்து பேச்சு நடத்தி அரசியல் தீர்வு விடயத்தில் உடன்பாடு ஒன்றினை ஏற்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க ரெலோ தலைமைக்குழு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று காலை முதல் மாலை வரை இடம்பெற்ற ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு வழிசமைக்கும் முகமாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு ரெலோ தலைமைக்குழு கோரியுள்ளது.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கொண்டு வர இருக்கின்ற 20ஆவது திருத்தம் தொடர்பில் விவாதித்து கூட்டமைப்பு ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதற்கு ஏதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுகின்றோம்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE