தமிழ் தினப் போட்டியில் இரு மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்[படங்கள் இணைப்பு]

315

தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் வவுனியா செட்டிகுளம் கோட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்

தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் வவுனியா, செட்டிகுளம் கோட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை கொழும்பு சேனநாயக்க வித்தியாலத்தில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் பங்பற்றியே செட்டிகுளம் மாணவர்கள் இருவரும் சாதனை படைத்துள்ளனர்.

இதன்படி, வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி.ம.ஆர்த்தனா பிரிவு – 5 இல் கவிதை ஆக்கத்தில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும், வவுனியா, மாணிக்கவாசகர் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன் அ.அனுசாந்த் பிரிவு – 4இல் கவிதை ஆக்கத்தில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்று தக்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

வவுனியா செட்டிகுளம் கோட்டத்தில் தேசிய ரீதியில் தனி ஆக்கத்தில் குறித்த நிகழ்வில் தங்கப்பதக்கம் பெறப்பட்டமை இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE