தீக்காயங்களுக்கு உள்ளான குடும்பஸ்தர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு

576

கடன் தொல்லை காரணமாக மனவிரக்தியடைந்த நிலையில் தனக்கு தானே பெற்றோல் ஊற்றி தீ வைத்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் இன்று(13) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மீசாலை மேற்கு மீசாலை பகுதியினை சேர்ந்த கந்தையா மணிமாறன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேசன் வேலை செய்து வந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முச்சக்கரவண்டி ஒன்றினை வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தினை கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் கடந்த வாரம் முச்சசக்கரவண்டியினை எடுத்து சென்றுள்ளனர்.

இதனால் மனவிரக்தியடைந்தவர் கடந்த ஆறாம் திகதி தனக்கு தானே தீ வைத்த நிலையில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இன்றையதினம்(13) சிகிச்சை பலன் இன்றி உயிரிந்துள்ளார். இறப்பு விசாரணைகளை தென்மராட்சி பகுதிக்கு பொறுப்பான விசாரணை அலுவலர் கே.இளங்கீரன் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE