நிலமெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில்[படங்கள் இணைப்பு]

204

 

 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள மக்களிற்கான நிலமெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை இன்று இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் குறித்த நடமாடும் சேவை கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா, அனுராதபுர மாவட்ட பா ம உறுப்பினர் சந்திம கமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உள்நாட்டலுவல்கள் அமைச்சன் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நடமாடு சேவையில் பல்வேறு திணைக்களங்களின் சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிட தக்கதாகும்.

குறித்த நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர்,
யுத்தம் நிறைவுற்றது என கூறிக்கொண்ட கடந்த கால அரசு சிறுவர்கள், முதியவர்கள் என பலரை கொலை செய்தே குறித்த வெற்றியை நாட்டியது. மக்களின் வாக்குகளால் ஆட்சியேறிய அரசுகள் அதே மக்களை அழித்தே யுத்தத்தில் வெற்றி கொண்டது. இன்று ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கியிருந்தோம். அவருக்கு இரண்டு கால்களும் இல்லை. அவருக்கு இப்போதே சக்கர நாற்காலி வழங்கப்படுகின்றது. யுத்தம் வெற்றி கொண்டாடிய அரசு இவர்கள் போன்றோருக்கு எதையும் செய்யவில்லை. நல்லாட்சி அரசு அமைக்கப்பட்டும் 3 வருடங்களின் பின்னரே இவரு்ககு சக்கர நாற்காலி கிடைத்துள்ளது, இவ்வாறு பலர் அங்கவீனர்களாகவும், அநாதைகளாக்கப்பட்டவர்களாகவும் இங்கு உள்ளனர். இவர்களை போன்றவர்களிற்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என மேலும் அவர் குறிப்பிட்டார்.

உரையாற்றிய பா உ சந்திம கமகே குறிப்பிடுகையில்,
பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகளை வழங்கவே இவ்வாறான நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்

உரையாற்றிய வ.மா சபை உறுப்பினர் ப.அரியரத்தினம்,
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு தேவைகளுடன் மக்கள் உள்ளனர். காணிபிரச்சினை வீட்டுத்திட்ட பிரச்சினை உள்ளிட்ட பல முக்கிய தேவைகளுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களிற்கு தேவையான அனைத்தையும் அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உரையாற்றிய அரசாங்க அதிபர்,
கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம். இவர்கள் யுத்தத்தின்போது பல்வேறு இழப்புக்களை சந்தித்தவர்கள், வீடுகள் முழுமையாக வழங்கப்படவில்லை. கிளி மாவட்டத்திற்கு மாத்திரம் 14 ஆயிரம் வுீடுகள் தேவையாக உள்ளது. குடிநீர் பிரச்சினை உள்ளிட்டவற்றிற்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனர். இவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE