பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் திருகோணமலைக்கு வருகை

146

இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியப் பிரபல பாடகர் கலைமாமணி உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா ஆகியோர் இன்று திருகோணமலைக்கு வருகைதந்தனர். அவர்களது இசை நிகழ்ச்சி இன்று மாலை திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் நடக்கவிருப்பதோடு அது தொடர்பாக தெளிவுபடுத்தும் பத்திரிகையாளார் சந்திப்பு இன்று மதியம் இடம்பெற்றது

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வருகை தந்த தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது அதில்
‘எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிலை பாட முடியாது’ என, அந்தச் சுவரொட்டியில் குறிப்பிட்டிருந்தது அத்துடன் அதில் பாடகர் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்த நிலையில் குறித்த நிகழ்வானது நேற்றையதினம் இரத்துச்செய்யப்பட்ட நிலையில் குறித்த விடையம் தொடர்பில் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்திய அரசின் அழைப்பின் பேரில் கடந்தமுறை யாழ்ப்பாணாத்தில் ஏட்பாடுசெய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வந்திருந்த போது எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இல்லாமல் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்யுமாறு அவர்களிடம் தெரிவித்திருந்ததாகவும் அப்போது ஏற்பாட்டாளர்கள் அவ்வாறான எந்த வித தலையீடுகளும் இருக்காது என்று தெரிவித்ததன் பின்னரே தாம் இங்கு வந்ததாக தெரிவித்தார்

யாழ்ப்பாண நிகழ்ச்சியின் இறுதியில் அவர் பாடல் ஒன்றைப் பாடி முடித்தவுடன் முன்னாள் அமைச்சர் அவர்கள் தனக்கு பொன்னாடை அணிவித்ததாக தெரிவித்தார் அப்போது அவர் யாரென்றுகூட தெரியாதனிலையில் அவரது மரியாதையை தான் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

அதன்பின்னர் தாம் நாடுதிரும்மியவேளை குறித்த விடயத்தினை மேற்கோள்காட்டி பலர் பலவகையில் சர்ச்சைகளை கிளப்பியிருந்தனர். இப்பிரச்சினை இருந்துகொண்டிருக்க தாம் ஒரு இசை நிகழ்ச்சிக்கு கனடாவிற்கு செண்றிருந்தவேளை அவர்களும் குறீத்த நிகழ்வினை நடத்த சிக்கலாக உள்ளதாக தெரிவித்திருந்தனர். அதனையடுத்து அவர் மன்னிப்புக்கேட்டதாக அவர் குறீப்பிட்டார்.

அவர் பகிரங்க மன்னிப்புக்கேட்டதை கனடாவில் இருப்பவர்கள் ஒரு அறிக்கையாக வெளியிட்டனர் எனவும் குறித்த அறிக்கைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தான் ஒரு கலைஞன் அவர் இங்குவந்தது மக்களை சந்தோசப்படுத்துவதற்கு மட்டுமே என தெரிவித்த அவர் என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை முட்டாளாக்கி என்னைவைத்து அரசியல் செய்துவிட்டனர் என வருத்தத்துடன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE