மன்னாரில் இஸ்ரேல் பிரஜை அன்னாசி பயிர்செய்கை:-பிரதேச மக்கள் விசனம்.

544

மன்னாரில் இஸ்ரேல் பிரஜை அன்னாசி பயிர்செய்கை:-பிரதேச மக்கள் விசனம்-மக்களின் காணிகளை மீட்டுத்தருமாறு பிரதேசச் செயலாளர் கோரிக்கை.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில் ‘இஸ்ரேல் நாட்டின்’ பிரஜை ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அன்னாசி பயிர்ச் செய்கை குறித்து பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

-குறித்த நபர் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் அன்னாசி பயிர்செய்கையில் ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

பருப்புக்கடந்தான் பகுதியில் சுமார் 160 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு அன்னாசி பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பகுதியில் காடு அழிக்கப்பட்ட நிலையில் மரங்கள் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு தென் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த காணி இலங்கையர் ஒருவர் ஊடாக இஸ்ரேல் நாட்டுப் பிரஜைக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அன்னாசி பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட 160 ஏக்கர் காணியில் சுமார் 100 ஏக்கர் காணி பொதுமக்களுக்கு சொந்தமான காணி என அவர் தெரிவித்தார்.

1989 ஆம் ஆண்டு கச்சேரியூடாக மக்களுக்கு வழங்கப்பட்ட காணி என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

எனினும் குறித்த காணியில் குடியிருந்த மக்கள் இடம் பெயர்ந்து தற்போது இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும்இ மக்களுக்கு உரித்தான காணியினை பெற்றுத்தருமாறு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE