ரவி பதவியில் இருந்து விலகினாலும் மத்திய வங்கியின் முறி மோசடி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது – ஜி எல் பீரிஸ்

276

 

 

ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சு பதவியில் இருந்து விலகியவுடன் மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகியவுடன் முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினை மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறைகள் மீது சந்தேகத்தை தோற்றுவிக்கும்.

இந்த போலியான நடவடிக்கை சர்வதேசத்திற்கு முன்னோடியான விடயமாக எடுத்துக்காட்டப்படும் எனவும் ஜி எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE