ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க பதவியை இராஜினாமா செய்தார் லலித் மோடி

345

 

 

ஐபிஎல் போட்டிகளில் பாரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள லலித் மோடி ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
லலித் மோடி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.
2008-ம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல். தொடருக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
ஐ.பி.எல். தொடருக்கான தலைமை நிறைவேற்று அதிகாரியாக செயல்பட்ட லலித் மோடி கோடிக்கணக்கில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் அவர் வெளிநாட்டில் தலைமறைவானதாக தகவல் வெளியாகியிருந்தது.
இவர் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் ஒரு பிரதிநிதியாக தொடர்ந்தும் அங்கம் வகித்துவந்த நிலையில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்தையும் தடை செய்திருந்தது.
பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாகாவுர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு தன்னுடைய மகனை நிறுத்தினார். ஆனால், லலித் மோடியின் மகன் தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் லலித் மோடி ராஜஸ்தான் கிரிக்கட் அணியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகும் கடிதத்தை மாநில் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE