விஜேதாச ராஜபக்ஷவுக்கு டிலான் பேரேரா அழைப்பு

137

 

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலக தயார் என்றால், ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைவதை தவிர்த்து ஜனாதிபதியுடன் இணையுமாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டிலான் பேரேரா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
பதுளை – ஹாலிஎல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஒன்றிணைந் எதிர்கட்சியினர் சந்தர்ப்பத்திற்கமையவே செயற்படுகின்றனர்.
எவ்வாறு அவர்கள் அழைப்பு விடுத்தாலும் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் உள்ள அனைவரும் அவரை ஏற்று கொள்ள போவதில்லை.
இதனை விஜேதாச ராஜப்ஷ புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலக தயார் என்றால் ஜனாதிபதியுடன் வந்து இணையுமாறு இராஜாங்க அமைச்சர் டிலான் பேரேரா அழைப்பு விடுத்தார்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE