27 சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை – இந்திய நீதிமன்றம்

355

 

 

 

சோமாலிய கடற்கொள்ளையர்கள் 27 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டிற்கு சொந்தமான வணிக கப்பலை சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்கள் கடத்தியிருந்தனர்.
அதில் இருந்த 24 தாய்லாந்து நாட்டு சிப்பந்திகளையும் கடற்கொள்ளையர்கள் பணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
கடத்தப்பட்ட கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் இருப்பதாக இந்திய கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 28 கடற் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதுடன், பணைய கைதிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த கடற் கொள்ளையர்கள் கடந்த ஆறு வருடங்களாக இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், குற்றவாளிகளுக்கு 7 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE