இந்தியாவில் புளூ வேல் கேம் விளையாட தடை!

403

கூகுள், மைக்ரோசாஃப்ட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யாஹூ போன்ற தளங்களில் இருந்து புளூ வேல் சார்ந்த லின்க்ஸ்களை (இணைய முகவரி) உடனடியாக நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புளூ வேல் விளையாட்டை ஒன்லைனில் விளையாடி இந்தியாவில் பல குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கைத் தொடர்ந்து ஆபத்து நிறைந்த கேமினை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் புளூ வேல் சேலன்ஜ் செய்து பல குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் சோக சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதைத் தொடர்ந்து ஆபத்து நிறைந்த புளூ வேல் மற்றும் இந்த கேம் சார்ந்து வலைப்பக்கங்களில் கிடைக்கும் அனைத்து லின்க்ஸ்களையும் நீக்க வேண்டும் என மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE