மணியர்குளம் சிறி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி தொகுதி

409

மணியர்குளம் சிறி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கத்தால் ஒலிபெருக்கி தொகுதி வழங்கி வைப்பு……

வவுனியா செட்டிகுளம் பிரிவிற்குட்பட்ட மணியர்குளம் சிறி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும் முன்னைநாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய மருத்துவர். பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2017இற்கான வருடாந்த நிதியொதுக்கீட்டில் ஒலிபெருக்கி உபகரணத்தொகுதியொன்று இன்று 16.08.2017 வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னைநாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திரு.ப.சத்தியசீலன் மற்றும் இணைப்புச் செயலாளர்கள் திரு.பாலச்சந்திரன் சிந்துஜன் திரு.அ.சுரேந்தர் ஆகியோர் நேரடியாக ஆலயத்திற்கு சென்று ஆலய நிர்வாக சபையினரிடம் அமைச்சரின் சார்பிலே வழங்கி வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE