மதுபான விலை உயர்வால் கவலை வெளியிட்ட வடமாகாண சபை உறுப்பினர்

343
இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் செனவிரட்ன கவலையுடன் தெரிவித்துள்ளார்.
கைதடியில் அமைந்துள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் இன்றைய தினம்  இடம்பெற்ற விசேட அமர்வின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு போத்தல் சாதாரண மதுபானத்தை கொள்வனவு செய்வதற்கு 1500 ரூபா செலவாகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் புன்சிரிப்புடன் சபையில் இருந்தனர்.
உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE