பேத்தாழை வீரையடி விநாயகர் ஆலய கொடியேற்றம்

411

மட்டக்களப்பு – வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் வேதஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது யாக பூசை, வசந்த மண்டப பூசையை தொடர்ந்து இறைவன் உள் வீதி வலம் வந்ததுடன், மஹோற்சவ கொடி ஏற்றப்பட்டு கொடிதம்ப பூசைகள் இடம்பெற்றதுடன், கொடியேற்ற பூசையில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம் 10 நாட்கள் திருவிழாவாக இடம்பெற்று எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.

இவ் மஹோற்சவ பூசைகள் யாவும் கிரியாக்ரமஜோதி பிரம்மஸ்ரீ இலக்ஷ்மிகாந்த ஜெகதீசக் குருருக்கள் மற்றும் ஆலய பிரதம குரு கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ.மு.சண்முகம் குருக்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE