குறை பிரசவ குழந்தைகளை காப்பாற்ற செயற்கை கருப்பை

398
குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற செயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பிட்ட காலத்தைவிட ஒரிரு வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் இன்குபேட்டர் கருவியில் வைத்து பாதுகாக்கப்படுகின்றனர்.
அதில் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பாதுகாப்பதில் சிரமம் உள்ளது.
எனவே தாயின் கருப்பை போன்றே வடிவமைக்கப்பட்ட செயற்கை கர்ப்பபையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், ஜப்பானில் உள்ள தொகோகு பல்கலைக்கழக ஆஸ்பத்திரியின் நிபுணர்களும் இணைந்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த செயற்கை கருப்பை தாயின் கர்ப்பபை போன்று மிகவும் பாதுகாப்பானது.
நோய் தொற்று எதுவும் ஏற்படாது. குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான பனிக்குட நீர் மற்றும் செயற்கை நச்சுக்கொடி போன்றவையும் உள்ளன.
அதன் மூலம் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 

காலங்காலமாக தமிழர்களின் அதிகாரங்களை உருக்குலைக்க குறுக்குவழியை பாவிக்கமுயலும் அரசு நரித்தந்திரங்களைக் கைவிடவேண்டும். எமது உரிமைகளுக்கான போராட்டம் அஹிம்சையில் ஆரம்பித்து பின்னர் ஆயுதம் ஏந்திப்போராடப்பட்டு மீண்டும் அஹிம்சை ரீதியில் இன்னும் தொடர்கின்றதே தவிர பிரச்சினைகளுக்கானத் தீர்வுகள் அரசினால் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றுத. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எமக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறுபான்மை மக்கள் ஒன்றாக இணைந்து மைத்திரி-ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசிற்கு ஆதரவு வழங்கினார்கள். ஆனால் இன்று என்ன நடந்திருக்கிறது. ஜனாதிபதி அவர்களால் தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மக்கள் காலங்காலமாக அரசினால் ஏமாற்றமடைவது வழமையாகிப்போயுள்ளதே தவிர மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.தமிழ் மக்களைப் பொறுத்தவரை போராட்டத்தினால் தான் தீர்வுகளைப் பெறமுடியும் என்கிற நிலை தான் அரசினால் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர நல்லாட்சி அரசு, யுத்தம் நிறைவுபெற்றுள்ளது, ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதில் பாரபட்சமாகவே செயற்படுகின்றது. தொடர்ந்தும் தமிழ் மக்களை தமது அடிமைகளாக வைத்திருக்கவேண்டும். தாம் சொல்வதையே கேட்கவேண்டும், தாம் வழங்குவதையே பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற நிலைதான் இன்றுவரை தொடர்கின்றது. இதில் பெரிதாக எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. தமிழ் மக்களுக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தி அதில் குளிர்காயவே சிங்கள பேரினவாதிகள் இன்னமும் முயல்கிறார்கள் என்பதுவே உண்மை. அரசின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமல் எமது உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் போராட வேண்டுமே தவிர, அரசின் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப அரசு கூறுவதற்கெல்லாம் தலையாட்டிச் செயற்படவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் மக்கள் எம்மைத் தமது பிரதிநிதிகளாகச் தெரிவுசெய்யவில்லை என்பதை நினைவிற்கொண்டு இனியாவது சிந்தித்துச் செயற்பட தமிழ்ப்பிரதிநிதிகள் முன்வரவேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE