இன்றைய ராசிபலன்: 4/9/2017

544
  • மேஷம்

    மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமை யின் ஆதரவு கிடைக்கும். சாதிக்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபா ரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • கடகம்

    கடகம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். போராடி வெல்லும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் ஒகை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத் தது நிறைவேறும் நாள்.

  • துலாம்

    துலாம்: திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாயா ருடன் வீண் விவாதம் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். அரசாங் கத்தாலும், அதிகாரப் பதவி
    யில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • மகரம்

    மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். திட்டமிட்ட காரியங்களை அலைந்து  முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரிடமும் உணர்ச்சி வசப் பட்டு பேசாதீர்கள். சொந்த-பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியா பாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE