கறுவாக்கேணி முத்துமாரியம்மன் ஆலய பால்குட பவனி (படங்கள் இணைப்பு)

135

வாழைச்சேனை கறுவாக்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த பால்குட பவனியும், 108 சங்காபிஷேகமும் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூசையைத் தொடர்ந்து ஆரம்பமான பால்குடபவனி, புதுக்குடியிருப்பு வீதி, கண்ணகிபுரம் வீதி, முல்லை வீதி, வாழைச்சேனை பிரதான வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.
ஆலயத்தில் யாக பூசை, அம்பாளுக்கு அபிஷேகப் பூசை, பாலாபிஷேகப் பூசை, சங்காபிஷேகப் பூசை மற்றும் வசந்த மண்டப பூசைகள் என்பன இடம்பெற்றது.
பால்குட பவனியில் பெருமளவிலான பக்தர்கள் மழைக்கு மத்தியில் கலந்து கொண்டிருந்ததுடன், இங்கு நடைபெற்ற வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இச்சங்காபிஷேக பூசைகள் யாவும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.எஸ்.கண்ணன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE