தல அஜித்துக்காக வருந்திய பிரபல காமெடி நடிகர்

344

பீமிலி கபடி ஜட்டு’, ‘எஸ்.எம்.எஸ். ஷங்கரா’ ஆகிய படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட இயக்குநர் டி.சத்யா இயக்கியிருக்கும் முதல் தமிழ் படம் ‘யார் இவன்’. சச்சின் ஜோஷி கதாநாயகனாகவும், ஈஷா குப்தா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரபு, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணன், சுப்ரீத் ரெட்டி, சத்ரு, டெல்லி கணேஷ், ஹாரிஸ், வெண்ணிலா கிஷோர், கிஷோர் குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். அப்போது பேசிய காமெடி நடிகர் சதீஷ் “இந்தப்படம் வெற்றியடைவதில் மீடியாக்களின் உதவி ரொம்ப முக்கியம். உங்கள்உதவி  இல்லாமல் திரைப்படங்களின் வெற்றி சாத்தியமில்லை. அப்படி எழுதினால் நிறைய தயாரிப்பாளர்கள் வருவார்கள்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “இப்போதெல்லாம் எல்லோரும் வீடியோக்களில் படங்களை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் கூட விவேகம் படத்தைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்திருந்தார். அவர் படத்தை மட்டும் திட்டியிருந்தால் பரவாயில்லை, அவ்ளோ பெரிய மனுஷன் அஜித்தை தனிப்பட்ட முறையில் திட்டியது தான் எனக்கு வருத்தமாகி விட்டது. இனிமேலாவது அந்த மாதிரியான விமர்சனங்களை தவிர்த்து படத்தின் வெற்றிக்குஉதவி  செய்யுங்கள்” என்றார்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE