வறட்சியான சருமத்தினருக்கு ஏற்றது தர்பூசணி

349

வறட்சியான சருமத்தினருக்கு இது ஏற்றது. தர்பூசணி ஜூஸ் மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் தயிர் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும் மற்றும் தர்பூசணி சரும செல்களில் உள்ள பாதிப்பை சரிசெய்யும்.

வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் தர்பூசணி சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் மட்டுமின்றி கை, கால் முழுவதும் தடவி ஊற வைத்துக் கழுவுங்கள். இதனால் சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படுவதோடு, முகப்பரு பிரச்சனையும் தடுக்கப்படும்.

தர்பூசணி மற்றும் அவகேடோ இரண்டிலுமே வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் உள்ளது. முக்கியமாக அவகேடோவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது முதுமையைத் தடுக்கும். அதற்கு அவகேடோ மற்றும் தர்பூசணி சாற்றினை ஒன்றாக கலந்துஇ முகத்திற்கு பயன்படுத்தி, ஊற வைத்து கழுவ வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE