திருகோணமலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயதேர் அமைக்கும் வேலை ஆரம்பம்[ படங்கள் இணைப்பு]

150

 

திருகோணமலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கு தேர் அமைக்கப்படுவதற்கான வேலைகள் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

திருப்பணி ஆலய போசகரும், ஆலய தலைவருமான, வெருகல் பிரதேச செயலாருமான மா.தயாபரன் தலைமையில் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கிராம மக்களும், ஆலய நிருவாக சபையினரும் கலந்து சிறப்பித்தனர்.

சித்திரத் தேர் ஆரம்பத்திற்கான பூசைகள் யாவும் ஆலய உற்சவகுரு கிரியாதிலகம் பிரம்மஸ்ரீ ஆ.ரமேஸ்வரக் குருக்கள், ஆலய குரு சிவஸ்ரீ வ.மதிகரக்குருக்கள் ஆகியோரின் தலைமையில் கிரியைகளுடனும், ஆசீர்வாதத்துடனும் சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேர் சிற்பிகள் வ.சிறிதரன் தலைமையிலான சன்னதியான் சிற்பாலயம் உடுவில் குழுவினர் சித்திரத் தேர் அமைக்கப்படவுள்ளதுடன், ஆலய உற்சவகாலத்தில் திருப்பணிச்ச பையில் நிதியுதவிகளை வழங்க முடியும்.

திங்கட்கிழமை காலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய தீர்த்தோற்சவம்; இடம்பெற உள்ளது.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE