உடல் எடை வேகமாக குறைய வேண்டுமா ?இதை செய்து பாருங்கள்

494

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

 

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர, எலுமிச்சையில் உள்ள அமிலங்கள் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, உடல் எடையைக் குறையச் செய்யும்.

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதைக்குடித்து ஒரு மணி நேரம் கழித்து தான் வேறு எந்த உணவையும் உண்ணுதல் வேண்டும் இது கொழுப்பு செல்களைக் கரைக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE