சகிப் அல் ஹசன் ஆறு மாத டெஸ்ட் ஓய்வு கோரிக்கை

256

பங்களாதேஸ் கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன், ஆறு மாதங்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளார்.
இதற்கான கோரிக்கையை அவர் பங்களாதேஸ் கிரிக்கட் சபையிடம் முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கிரிக்கட் வாழ்க்கையை நீடித்துக் கொள்ளும் நோக்கில் தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஸ் கிரிக்கட் சபை, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை செய்யவுள்ள நிலையில், சகிப் அல் ஹசனின் கோரிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் அவருக்கு 3 மாதங்கள் வரையில் ஓய்வு வழங்கப்பட்டு, இலங்கையுடன் டிசம்பரில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்குமாறு கோரப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE