சவுதியில் இருந்து திரும்பிய பெண் கொடுத்த தகவல்:

1151

வறுமை காரணமாக சவுதிக்கு வேலைக்கு சென்ற பெண் அங்கு தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து கூறியுள்ளார்.ஹைதராபாத்தை சேர்ந்த மேரா பேகம் என்பவர் ஏஜெண்ட் உதவியுடன் சவுதிக்கு சென்றுள்ளார்.

உங்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் என்றும் அங்கு நீங்கள் புனித பயணம் வழங்கலாம் எனவும் ஏஜெண்ட் கூறியுள்ளார்.அதன்படி சவுதிக்கு சென்ற மேரா ஒரு பணக்கார வீட்டில் வேலைக்கு சென்றுள்ளார்.
அங்கு இவருக்கு அதிகமான பணிகள் மட்டுமல்லாமது பாலியல் தொல்லையும் கொடுக்கப்பட்டுள்ளது, ஒரு வழியாக தனது சகோதரியை தொடர்பு கொண்டு, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியுடன் இன்று ஐதராபாத்துக்கு வந்துள்ளார்.
அவர் கூறியதாவது, சவுதியில் எனக்கு அதிக வேலை கொடுக்கப்பட்டது, அதற்கேற்ற உணவு தரமாட்டார்கள்.
என்னை கொடுமையாக அடித்து துன்புறுத்தினார்கள், அது மட்டுமின்றி அந்த வீட்டு உறுப்பினர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதிலிருந்து தப்பிக்க நான் மிகவும் துயரப்பட்டேன், எனது சகோதரியிடம் பேசுவதற்கு கூட எனக்கு அனுமதி தரவில்லை.
என்னை போன்று பல்வேறு பெண்கள் அங்கு துயரப்படுகிறார்கள், அவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE